சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 1000 பெண்களுக்கு உலருணவு வழங்கிய இராணுவம்..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட இராணுவ தலமையகத்தினால் 1000 பெண்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இன்று உடுவில் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கின்றது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி பிரியந்த பெனாண்டோ தலைமையில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கர்ப்பிணிப் பெண்கள்
மற்றும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு இவ்வாறு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.