யாழ்.நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் விற்பனைக்கு விட அமைச்சு இணக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் விற்பனைக்கு விட அமைச்சு இணக்கம்..

யாழ்.நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படும் பனைசார் உள்ளூர் உற்பத்தி பொருட்களை நெடுந்தீவு என்ற பெயருடன் விற்பனை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இணக்கம் தொிவித்துள்ளார். 

உள்ளூர் விற்பனையாளர்களின் வேண்டுகோளிற்க்கு ஏற்ப “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன்ற இராமநாதன் கேட்டுகொண்டார். அதற்கு பூரண சம்மதத்தை அமைச்சர் தெரிவித்ததோடு நெடுந்தீவு வர்த்தக நாமத்துடன் 

வெளிச் செல்லும் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி உயர்வு மட்டத்தை வருடாவருடம் பார்வையிட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு