365 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது இந்தியா!! -160 ஓட்டங்கள் முன்னிலையில்-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகியது.
இன்றைய ஆட்டத்திலும் வாசிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓரளவு பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் 43 ஓட்டங்கள் பெற்ற நிiயில் ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் வாசிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கி கொண்டிருந்ததால், அவர் சதம் அடிப்பாரா? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் அடுத்து வந்த இசாந்த் சர்மா மற்றும் முகம்மது சிராஜ் ஓட்டம் எதுவும் இன்றி வந்த வேகத்தில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் வாசிங்டன் சுந்தர் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி114.4 ஓவர்களில் 365 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. தற்போது இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.