மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி!! -43 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி-

ஆசிரியர் - Editor II
மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி!! -43 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி-

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான 2 ஆவது ரி-20 போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. 

முதலாவது போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமறிங்கிய தனுஸ்க குணதிலக மற்றும் பதும் நிஸங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் இலங்கை அணி பெற்றிருந்தது.

161 ஓட்டங்களை பெற்றால் தொடரையும் வென்றுவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளைங்கினர். 

கடந்த போட்டியில் ஹட்ரிக் முறையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த அகில தனஞ்செய் எவின் லீவிசை 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றியிருந்தார்.

தொடர்ந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இறுதிவரை மீளமுடியாத அளவுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்திருந்தனர்.

இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியத் தீர்வுகள் அணி 117 ஓட்டங்களை மட்டும் பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி சார்பில் ஹசரங்க டீ சில்வா மற்றும் சன்டகன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், சமீர 2 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்செய ஒரு விக்கெட்டையும் கைப்பைற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க டீ சில்வா தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் தொடரை இலங்கை அணி 1:1 என சமநிலைப்படுத்தியுள்ளது. 

தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு