யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்குள் நுழைந்த 13 பேர் கடற்படையினால் கைது..!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட புத்தளம் மீனவர்கள் 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 பேர் கைது செய்யப்பட்டதுடன் 4 வள்ளங்களும் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி
மீன்பிடியில் ஈடுபட்டுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து சுற்றி வளைப்பில் மீனவர்களை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.