கடந்த 2 வாரங்களில் கார்கில்ஸ் திரையரங்கில் படம்பார்க்க சென்றோர் தங்களை அடையாளப்படுத்துங்கள்..! சுகாதார பணிப்பாளர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
கடந்த 2 வாரங்களில் கார்கில்ஸ் திரையரங்கில் படம்பார்க்க சென்றோர் தங்களை அடையாளப்படுத்துங்கள்..! சுகாதார பணிப்பாளர் கோரிக்கை..

யாழ்.நகரில் உள்ள ஹார்கில்ஸ் கட்டிடத்தில் உள்ள சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் திரையரங்குக்கு படம் பார்ப்பதற்காக கடந்த 2 வாரங்களுக்குள் சென்றவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தம்மை அடையாளப்படுத்தவேண்டும். 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், காய்ச்சல், தடிமன், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் இருப்பின்

உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் அல்லது மாகாண சுகாதார திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தங்களை அடையாளப்படுத்தவேண்டும். 

குறித்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் 7 பேருக்கு நேற்றய தினம் தொற்று உறுதியான நிலையில் திரையரங்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக திரையரங்குக்கு 2 வாரங்களுக்குள் 

படம் பார்க்க சென்றவர்களும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்களை அடையாளப்படுத்துங்கள். என பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு