பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வியாபாரிகள்..! வெறிச்சோடிய கொடிகாமம் சந்தை..

ஆசிரியர் - Editor I
பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வியாபாரிகள்..! வெறிச்சோடிய கொடிகாமம் சந்தை..

யாழ்.கொடிகாமம் சந்தையில் 80 வீதமான வியாபாரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத நிலையில் பரிசோதனை மாதிரிகளை பெற முடியவில்லை. என சுகாதார பிரிவினர் கூறியிருக்கின்றனர். 

கொடிகாமம் சந்தை மரக்கறி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 3 நாட்களுக்கு சந்தை முடக்கப்பட்டு தொற்று நீக்கப்பட்டு சந்தை இயங்க ஆரம்பித்திருக்கின்றது. எனினும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட

வியாபாரிகள் மட்டுமே சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் 80 வீதமான வியாபாரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத நிலையில் சுமார் 6 வியாபாரிகளுடன் கொடிகாமம் சந்தை வெறிச்சோடியுள்ளது. 

பொதுமக்களும் மிக குறைந்தளவானோரே சந்தைக்கு சென்றதையும் அவதானிக்க முடிந்தது. நேற்று மீள PCR மாதிரிகள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதில் 200 பேருக்கான PCR மாதிரிகள் பெறப்பட்டுள்ளது, அதற்கான விடைக்காக காத்திருப்பு.

பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் செய்யவேண்டாம் எனவும், பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு சுகாதார பிரிவினர் கேட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு