இரணைதீவில் அது நடக்காது..! அதை நான் உறுதியாக நம்புகிறேன், பேச வேண்டிய இடத்தில் பேசியும் இருக்கிறேன்..

ஆசிரியர் - Editor I
இரணைதீவில் அது நடக்காது..! அதை நான் உறுதியாக நம்புகிறேன், பேச வேண்டிய இடத்தில் பேசியும் இருக்கிறேன்..

இரணைதீவில் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட பலருடன் பேசியிருக்கிறோம். சடலம் அடக்கம் செய்யப்படாது. என நான் நம்புகிறேன். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிரக்கின்றார். 

இன்று இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயத்தை அமைச்சர் தொிவித்திருக்கின்றனர். இரணைதீவு மக்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளால் இரணைதீவு பிரதேசம் 

ஒரு பூர்வீக பிரதேசம் என்றும், 30 வருடங்களிற்கு பின்னர் அந்த இடத்திற்கு சென்றபோதும் அங்கே இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அங்கு பெரும் காடுகளாக காணப்படுகின்றது. 

அவற்றை கத்தி, கோடாளி போன்ற ஆயுதங்களைகொண்டு துப்பரவு செய்ய முடியாதுள்து. அதனை இயந்திரங்கள் மூலமே துப்பரவு செய்ய வேண்டி உள்ளது.இவ்வாறான வசதி குறைபாடுகள் உள்ளபோதும் அந்த பிரதேசத்தில் தொழிலிற்காகவும். 

பூர்வீக இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு சென்றுள்ளோம்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் இந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவை தெரிவு செய்து அங்கே ஆரம்ப வேலைகளை செய்திருக்கின்றனர். 

இது எங்களிற்கு மன வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.அந்த ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களின் இடங்களில் அடக்கம் செய்யவேண்டும். 

இன்றைய தினம், காலைமுதல் இரணைதீவிற்கு செல்வதற்கு கடுமையான தடைகளை கடற்படையினர் விதித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏதோவொரு விதத்தில் 

இரணைதீவு தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகின்றேன். இது தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசியிருக்கின்றேன். இந்த பிரதேசத்தில் அச்சம்பவம் நடைபெறாது என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு