காடு வெட்டி கள்ள காணி பிடித்ததை தட்டிக் கேட்டதற்கு பிரதேச செயலரையே பதவி நீக்க சதி..! அரசியல்வாதிகள் பின்னணியில். வடக்கில் நடக்கும் அரசியல் அடாவடி..
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கில் காட்டை அழித்து காணி பிடிக்கும் தனிநபர் ஒருவர் தன்னையே பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாக பிரதேச செயலர் பொதுமக்கள் முன்பாக தனது மனத்தாங்கலை கூறியிருக்கின்றார்.
மாந்தை கிழக்கு - வடகாடு கிராமத்தில் தனிநபர் ஒருவர் அரசுக்கு சொந்தமான காட்டை அழித்து காணி பிடித்துவருகின்றார். இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போதே பிரதேச செயலர் மேற்படி தகவலை கூறியுள்ளார்.
இதன்போது பிரதேச செயலர் மேலும் கூறுகையில், இந்தக் காணி தொடர்பாக ‘அ’ படிவம் ஒட்டப்பட்டு அதனை மீறியும் காணி அபகரிப்புத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர், குறித்த நபர் வெளிப்படுத்தல் உறுதியினைக் காட்டினார். அது அரச காணி என்பதை தெரிவித்துள்ளோம். அரசகாணி ஆக்கிரமிப்புத் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து பிரதேச செயலாளர் என்ற ரீதியில்
எனக்குப் பலதரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்னை இந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என எனக்கு எதிராக முறைப்பாடு எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். இதில், ஒரு குழுவாக சட்டத்தரணிகள்,
அரசியல் பிரமுகர்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிகின்றது. எங்களுக்கு அழுத்தங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக சமூகத்தின் ஒற்றுமை கருதி நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை யாரும் காணியில் இறங்காதவாறு தடைசெய்ய நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து
நீதிமன்றத்தில் தடை உத்தரவு எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அரச காணி முகாமைத்துவம் என்பது கஷ்டமான விடயம். பல பிரச்சினைகள் உள்ளன.நான் பிரதேச செயலாளராக வருவதற்கு முன்பே இடம்பெற்ற தவறுகளும் என்மீது சுமத்தப்பட்டு,
அமைச்சுக்குளுக்கு திணைக்களங்களுக்கு அரசியல் பிரமுகர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.நீதிமன்ற முடிவு வரும் முன்னரே பிரதேச செயலாளருக்கும் பிரதேச செயலக நிர்வாகத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். எ
ன்னை இங்கிருந்து மாற்றம் செய்யவேண்டுமென அந்த குழுவினர் செயற்பட்டு வருகின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.