யாழ்.மாவட்ட செயலக வாயிலை முடக்கி தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலமையில் போராட்டம்..!

வடமாகாண காணி ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்திற்கு மாற்றுவதை எதிர்த்து யாழ்.மாவட்ட செயலக வாயிலை மூடி போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை நடத்தப்பட்டிருக்கின்றது. போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன்
மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அநுராதபுரத்தில் உள்ள அலுவலகத்துக்கு வடமாகாண காணி ஆவணங்களை
மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.