குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் காணாமல்போயிருந்த இரு குழந்தைகளும் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த சம்பவத்தில் காணமல்போயிருந்த மேலும் இரு குழந்தைகளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது 3 பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு
கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 5 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள் தொடர்பில் பொலிசாரும், கிராம மக்களும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது குறித்த இரு குழந்தைகளும் கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருவதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.