யாழ்.கொடிகாமம் சந்தை முடக்கப்பட்டது..! சந்தைக்குள் தொற்று நீக்கல் நடவடிக்கை, பீ.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தை முடக்கப்பட்டது..! சந்தைக்குள் தொற்று நீக்கல் நடவடிக்கை, பீ.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதி..

யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொற்று நீக்கம் செய்வதற்காக இன்றைய தினம் சந்தை பூட்டப்பட்டுள்ளது. 

நாளைய தினம் சந்தை வழமை போல இயங்கும். ஆனாலும் PCR பரிசோதனைக்கு உட்ப்பட்டவர்கள் மாத்திரமே வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.

என சுகாதார பிரிவு அறிவித்துள்ளதுடன், பரிசோதனைக்குட்படாத வியாபாரிகள் PCR பரிசோதனைகளின் பின்னரே வியாபார நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுவார்கள். 

எனவும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்துடன் சந்தையில் மூன்று வாயில்கள் உள்ள போதும், ஒரு வாயிலில் மாத்திரமே கை கழுவிசுத்தம் செய்ய தண்ணீர் 

மற்றும் சவர்காரத் திரவம் வைக்கப்படுவதாகவும், ஏனைய இரு வாயில்களில் இவ் நடவடிக்கை இல்லை என வியாபாரிகள் சுட்டிக் காட்டினர். 

இதனை சாவகச்சேரி பிரதேச சபையினர் கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர், இதனை பொதுச் சுகாதார பரிசோதர் அவதானித்து 

நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு