மீண்டும் களமிறங்கும் முரளி, சனத் உள்ளிட்ட ஜாம்பவான்கள்!!

வீதி பாதுகாப்பு ரி-20 உலகக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்தியாவின் ராய்ப்பூரில் ஆரம்பமாகி மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதனால் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா மற்றும் முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரியா ஆகியோர் மீண்டும் களத்தில் இறங்கவுள்ளனர்.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 11 அன்று நான்கு ஆட்டங்களுக்குப் பின் இந்தத் தொடரின் முதல் தொகுதி ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் 2 ஆம் தொகுதி ஆட்டம் தற்Nபுhது ராய்ப்பூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.