SuperTopAds

தீவிரமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
தீவிரமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்..!

க.பொ.த சாதாரண தர பரீட்சை வடக்கில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரணப் பரீட்சையில. வடக்கு மாகாணத்தில் 44 ஆயிரத்து 245 மாணவர்கள்  பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் முக கவசம் அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு செல்லும் முன்னர் 

கைகள் கழுவி கிருமி தொற்று நீக்கி திரவம் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். வடக்கு மாகாணத்தில் தற்போதைய கொரோனா நிலைமையில் 

பரீட்சையினை சிறப்பாக முன்னெடுப்பதற்காக சுகாதார திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களத்தினால் சகல முன்னேற்பாடுகளும் 

முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பரீட்சைகள் ஆரம்பமாகியது.