பொறுப்பற்ற பெற்றோர்..! 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொறுப்பற்ற பெற்றோர்..! 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..

கிளிநொச்சி - கச்சோி வீதியில் வசித்துவந்த 3 குழந்தைகள் 17 வயது சிறுவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 7 வயது சிறுவன் கிளிநொச்சி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த தந்தை மற்றும் தாய் வேறு வேறு சமயங்களை சார்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் 4 வயது, 7 வயது, 9 வயதில் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயார் கடந்த 20ம் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் குழந்தைகளை தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு அழைத்து சென்றிருந்த தந்தை அங்கு விட்டுவிட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. 

இதற்கிடையில் குழந்தைகளின் தந்தை சகோதரர் வீட்டிலிருந்து செல்லும்போது அங்கிருந்த மாடு ஒன்றையும் எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் குழந்தைகளின் பொியப்பாவுடைய 17 வயதான மகன் நேற்று முன்தினம், 

9 வயது மற்றும் 4 வயதான குழந்தைகளை கொரூரமாக தாக்கியுள்ளார். இதேபோல் கடந்த 22ம் திகதி 7 வயதான சிறுவனை அருகில் உள்ள வீடொன்றுக்கு அழைத்து சென்ற குறித்த 17 வயதான சிறுவன் அடித்து காயப்படுத்திய நிலையில்

இரத்த வெள்ளத்திலிருந்து சிறுவன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவன் உயிரிழந்துள்ளான். தலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தொியவந்துள்ளது. 

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான சிறுவன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவத்தில் அப்துல் ரகுமான் தயா (வயது-7) என்ற சிறுவனே அடித்து கொல்லப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். 

Radio