யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த நபர் ஒரு வைத்தியர். நேற்றய தினம் யாழ்.சங்கானையில் கொரோனா தொற்றுக்குள்ளான

ஆசிரியரின் கணவராவார். மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் 

நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற சென்றபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. மேலும் வவுனியா மாவட்டத்தில் தொற்று உறுதியான நபர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், 

மீண்டும் நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

Radio