யாழ்.மாவட்டத்தில் மிக அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது..! மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய தருணம் இது, யாழ்.மாவட்ட செயலர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மிக அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது..! மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய தருணம் இது, யாழ்.மாவட்ட செயலர் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரின் மூலமாகவே கொரோனா தொற்று பரவுவதாக முன்னர் கணிக்கப்பட்டபோதும். தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள வெளிமாவட்ட தொடர்பற்றவர்களுக்கும் தொற்று பரவுவது அபாயகரமானதாகும். என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே மாவட்டச் செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 191 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். 

மேலும் 513 குடும்பங்களைச் சேர்ந்த 987 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.  தற்போது யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் பொதுமக்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமார் 150 பேர் மாத்திரம் பங்குபற்றி குறித்த நிகழ்வுகளை 

நடாத்த சுகாதாரப்பிரிவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போதைய நிலையில் மிக மிக அவதானமாக இருப்பது முக்கியம் முதலில் வெளி மாவட்டத்திலிருந்து வருவோரால் மாத்திரமே தொற்று பரவுவதாக கருதப்பட்டது எனினும் தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ளோரால் தொற்று உறுதிசெய்யப்படுகின்ற நிலையானது 

மிகவும் அபாயகரமான நிலையாக காணப்படுகின்றது எனவே இந்த நிலையில் பொதுமக்கள் அலட்சிய போக்கை விடுத்து தங்களையும் தங்களுடைய குடும்பத்தையும் பாதுகாப்பதோடு சமூகத்தினையும் பாதுகாக்க முன்வரவேண்டும் இந்த நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 

பொதுமக்கள் அலட்சியமான மனப்பாங்குடன் அதனை அணுகுவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மக்கள் தமதும் தமது சமூகத்தினதும் பாதுகாப்பு கருதி பாதுகாப்புடன் இருக்கவேண்டும். அதேபோல் க.பொ.த சாதாரண தர பரீட்சையும் நாளை ஆரம்பமாகும் நிலையில் மாணவர்களும், பொதுமக்களும் 

பாதுகாப்பாக இருக்கவேண்டும் என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

Radio