SuperTopAds

யாழ்.சிறைச்சாலை மற்றும் போதனா வைத்தியசாலையிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! 51 சிறை கைதிகள், 3 தாதியர் உட்பட 62 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலை மற்றும் போதனா வைத்தியசாலையிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! 51 சிறை கைதிகள், 3 தாதியர் உட்பட 62 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் தொற்றுக்குள்ளாவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தகவல் தருகையில், யாழ்.மாவட்டத்தில் 59 பேர் உட்பட வடமாகாணத்தில் 62 பேருக்கு

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்களில் யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 51 பேர் யாழ்.சிறைச்சாலை கைதிகள். 

மேலும் சண்டிலிப்பாய் பகுதியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் 3 பேர் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மற்றும் கொடிகாமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் யாழ்.சங்கானையில் 81 வயதான மூதாட்டிக்கும் 18 வயதான பேரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் மன்னார் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஆடை தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி வடமாகாணத்தில் இன்று மட்டும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.