SuperTopAds

இலங்கை முழுவதும் நுண்கடன் திட்டங்களினால் மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்..! அது தொடர்பில் அரசு ஆராய்கிறது..

ஆசிரியர் - Editor I
இலங்கை முழுவதும் நுண்கடன் திட்டங்களினால் மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்..! அது தொடர்பில் அரசு ஆராய்கிறது..

வடமாகாணத்தில் மிக நீண்டகாலம் இயங்காமல் இருக்கும் தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்த முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மக்களுடைய பொருளாதாரப் பிரச்னைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக சங்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது 

பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் தொடர்பில் ஆராய்ந்தோம். அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஆராய்ந்தோம். 

அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம். படகு கட்டுமானங்கள் தொடர்பாகவும், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது 

என்பது தொடர்பிலும் ஆராய்ந்திருந்தோம். அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். 

விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் விரிவாக ஆராய்ந்திருந்தோம். அத்தோடு இந்த இரண்டு துறைகள் மூலமே எமது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரித்துச் செல்ல முடியும்.அத்தோடு தற்போது குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய 

சில திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது. முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் மூலம் 

பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள், நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மால் முடிந்த உதவி, ஒத்துழைப்பை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் 

எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும். வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயல்பட்டு வருகின்றோம்.

நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்னையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே அதிகளவில் காணப்படுகின்றது. அத்தோடு இந்த நுண் கடன் தொடர்பில் 

நாடு பூராகவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்ற பலர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்தத் தொழில் முயற்சியானது 

வெற்றியளிக்காத நிலையில் கடனை மீளச் செலுத்த முடியாது அவதிப்படுகின்றனர். அத்தோடு வியாபார வலையமைப்பும் இந்த நுண் கடன் பிரச்னைக்கு ஒரு காரணமாகக் காணப்படுகின்றது. 

எனினும் இந்த நுண்கடன் தொடர்பான பிரச்சினை தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.