யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி..! இன்று முதல் இறுக்கமான நடைமுறை அமுல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி..! இன்று முதல் இறுக்கமான நடைமுறை அமுல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படும். என யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார். 

போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்தவாரம் வைத்திய நிபுணர் உட்பட 3 பேருக்கு

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிபுணர் குழுவை கூட்டி கட்டுப்படுத்தல் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு சில பிரிவுகளை தற்காலிகமாக மட்டுப்படுத்தி தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுத்துள்ளேன். 

தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட சேவையை தொடர முடியாது. இன்றும் நிபுணர் குழு கூட்டத்தில் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம், ஊழியர்கள், நோயாளர்கள், பார்வையாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது. 

இதன்படி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் ஒரு நோயாளருக்கு ஒரு பார்வையாளர் மட்டும் வரலாம். மேலும் முக கவசம் அணிந்தே வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள், பார்வையாளர்கள்

முகமூடி அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மட்டுப்படுத்தப்பட்டுள்ள சகல சேவைகளும் 5ம் திகதி முதல் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் மக்கள் சகல ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டும். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 86 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். 1வது தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. அது ஒரு பகுதி பாதுகாப்பையே வழங்கும் முழுமையான பாதுகாப்புக்கு 2வது தடுப்பூசி வழங்கப்படவேண்டும். 

அதது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு