இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்ககூடிய இடம் யாழ்.பல்கலைகழகம்..! இராஜாங்க அமைச்சர் நிவாட் கக்ரால்..

ஆசிரியர் - Editor I
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்ககூடிய இடம் யாழ்.பல்கலைகழகம்..! இராஜாங்க அமைச்சர் நிவாட் கக்ரால்..

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிதி மூலதன மற்றும் சந்தை, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்.பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன், பேரவை கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கின்றார். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அமைச்சர் கல்வியலாளர்களுடன் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சிஅடைகின்றேன் என்னுடைய பழைய நண்பர்கள் மற்றும் ஏனைய கல்வியலாளர்களை மீள காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு உங்களிடம் இருந்து பல விடயங்களை அறிவதற்கு ஆவலாக உள்ளேன் யாழ்ப்பாண மக்களுடன் நான் நீண்ட தொடர்பினை பேணி வருகின்றேன்.

நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களின்போது யாழ்.மக்களுடன் தொடர்புகளை பேணி இருக்கின்றேன் நமது மத்திய வங்கியின் வடக்குஅலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பில் 

இங்கே பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். அத்தோடு கொழும்பை தளமாக கொண்ட வங்கிகளின் உப அலுவலகங்களில் கூட இங்கே யாழ்ப்பாணத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வரும்போது 

ஒரு விஷயத்தை கவனித்தேன் இங்கே விவசாய நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் அவதானித்தேன் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் விவசாயத்துக்கான நீர் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. 

அவ்வாறான நிலையில்கூட விவசாயிகள் விவசாயத்தை மிகவும் சிறப்பாக மேற்கொள்கிறார்கள் அதாவது எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என வயல்களும் தோட்டங்களும் காட்சியளிக்கின்றன இன்றைய தினம் நான் வருகை தந்தபோது பல்கலைக் கழகத் துணைவேந்தர் 

ஒரு விடயத்தினை தெரியப்படுத்தினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 11000 மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கின்றார்கள் அதில் 4500 பேர் தென் பகுதியைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள் .யாழ்.மாவட்டத்திற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

தென்பகுதி மாணவர்களும் வடபகுதி மாணவர்களும் இங்க கல்வி கற்கிறார்கள் அதன் காரணமாக சில புரிந்துணர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே அது ஒரு மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. 

தாங்களாகவே புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒரு சாதக நிலை காணப்படுகின்றது.  நேருக்கு நேர் சந்திப்பதன் காரணமாக சில புரிந்துணர்வு ஏற்படும் அதாவது இதனை மனிதன் கெமிஸ்ட்ரி என அழைப்பார்கள் அத்தோடு தற்பொழுது நான் இங்கே வந்ததன் நோக்கம் 

உங்கள் மூலம் இங்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பில்கேட்டறிந்து கொண்டு அதனை செயல்படுத்தும் முகமாகவே நான் இங்கு வருகை தந்துள்ளேன். தற்பொழுது நமது நாடானது முதலீட்டிற்கு முன்னுரிமை அளித்து வருகின்ற நிலை காணப்படுகின்றது. 

எமது அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு சென்று முதலீடுகளை அதிகரிப்பதேயாகும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். 

அத்தோடு வடக்கினை பொறுத்தவரைக்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன அத்தோடு யாழ்.பல்கலைக்கழகத்தில் கூட பல்வேறுபட்ட புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகமாணவர்களுக்குரிய வசதி வாய்ப்புகள் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டுள்ளன குறிப்பாக ஏனைய பிரதேசங்களை போலவே இந்தப் பிரதேசத்து மாணவர்களுக்கும் அந்த வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கி செயற்படுத்துவோம் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு