SuperTopAds

இலங்கையின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததா? இந்திய போர் விமானங்கள்..! இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா..? மூச்சுவிடாமலிருக்கும் கொழும்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததா? இந்திய போர் விமானங்கள்..! இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா..? மூச்சுவிடாமலிருக்கும் கொழும்பு..

இந்தியாவின் ஆறுக்கும் குறையாத போர் விமானங்கள் இலங்கையின் வடக்கு கடல் பரப்புக்குள் ஊடுருவி வட்டமிட்டுப் பறந்து ஒரு செய்தியைக் கொழும்புக்குச் சத்தம் சந்தடியின்றி தெரியப்படுத்தியிருந்தன எனத் தமிழகத்தில் வெளியான தகவலினால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தின் பிரபலமான பத்திரிகையாளர் கா.அய்யநாதன் ஓடியோ மூலமான பேட்டி நிகழ்வு ஒன்றில் இந்தப் பர பரப்புத் தகவலை வெளியிட்டிருக்கின்றார். கடந்த 16 ஆம் திகதி இந்தியப் போர் விமானங்களின் பறப்பு நிகழ்வு இடம்பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

வடக்கு இலங்கையின் வடக்கே உள்ள நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுப் பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதற்கு கொழும்பு அரசு முடிவெடுத்த பின்னர் இந்த விமானப் பறப்புச் சம்பவம் இடம்பெற்றது எனவும் இதன்மூலம் எந்தவித நடவடிக்கைக் கும் நாம் தயார் என்பதை 

கொழும்புக்கு புதுடில்லி உணர்த்தியுள்ளது எனவும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான கா.அய்யநாதன் தெரிவித்திருக்கின்றார். 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் இலங்கை வான் பரப்புக்குள் இந்தியப் போர் விமானங்கள் நுழைந்து யாழ். குடாநாட்டு மக்களுக்கு நிவாரணப்பொருள்களை 

வீசிய 'ஒப்பரேன் பூமாலை' சம்பவத்தோடு இதனை ஒப்பிட்டுக்கருத்து வெளியிட்டார் அவர். எனினும், இத்தகைய சம்பவம் ஏதும் நடைபெற்றதா என்பது பற்றி மூச்சுக் கூட கொழும்புப் பக்கத்தில் இருந்து வரவில்லை. இந்திய விமானப்படையுடன் தொடர்புடைய தமிழக வட்டாரங்களிடம் இது குறித்து விசாரித்தபோது 

"கிழக்குப் பாகிஸ்தானுக்குள் இந்தியப் படைகள் ஊடுருவி அதனை சுதந்திர வங்களாதேசமாக உருவாக்கிய போர் நடவடிக்கையின் ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்வுகள் தற்போது தொடாந்து நடைபெற்று வருகின்றன. அதனை ஒட்டி ஒன்பது போர் விமானங்கள் நாட்டின் பல விமான நிலையங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றன. 

அந்த விமானங்கள் கடந்த வாரத்தில் தமிழகம் உட்பட்ட தென்மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அவற்றில் எவையும் இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைதிருக்கக் கூடும்" என அவை தெரிவித்தன. இவ் விடயத்தை ஒட்டிய உண்மைத் தகவல்கள் இனிமேல்தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.