டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்!! -அஸ்வின் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்!! -அஸ்வின் புதிய சாதனை-

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2 ஆவது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்ச்சரை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு மோதிய 3 ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் ஆரம்பமாகி 2 நாட்களிலேயே முடிவடைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2 ஆவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2 ஆவது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்சரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட் எனக் மைல்கல்லை அஸ்வின் எட்டி சாதனை படைத்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு