நாட்டின் மீது அன்பு கொண்ட அரசியல்வாதிகள் குறைவு

ஆசிரியர் - Editor I
நாட்டின் மீது அன்பு கொண்ட அரசியல்வாதிகள் குறைவு

நாட்டின் மீது அன்பு கொண்ட அரசியல்வாதிகள் இந்த நாட்டில் மிககுறைவானவர்களே உள்ளார்கள் மிக பெரும்பாலான அரசியல்வாதிகள் தமக்கென தனியான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வைத்துக் கொண்டு தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக செயற்படுகிறார்கள். 

அவர்களுடைய நோக்கம் எல்லாம் அடுத்ததாக யார் ஆட்சியை பிடிப்பது என்பது மட்டுமே. அவர்களுக்கு வேறு கவலைகள் கிடையாது. மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். இன்றைய தினம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தொழிநுட்ப நிலைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக யாழ்.வந்திருந்த ஜனாதிபதி அங் கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

எதிர்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் தங்கள் உரையில் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார்கள். 

அந்த விடயங்களில் அரசாங்கம் என்றவகையி ல் மிகவும் பொறுப்புணர்வுடன் நாங்கள் நடந்து கொள்கிறோம். இந்த நாட்டில் பல்வேறு அரசியல் முறுகல் நிலைகள் இருந்து கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்துள்ளீர்கள். 

இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட அல்லது அன்பு கொண்ட அரசியல் வாதிகள் மிக சொற்பமானவர்கள் அல்லது மிக சிலரே உள்ளார்கள். மிகுதி பெரும்பாலானவர்கள் தனியான நிகழ்ச்சி நிரல் ஒன்றை உருவாக் கி கொண்டு அதன்படி செயற்படுகின்றார்கள். 

அவர்களுக்கு நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். என்ற எண்ணம் கொஞ்சமும் கிடைக்காது. நாட்டில் உள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கிடைக்காது. அவர்களுடைய நோக்கம் எல்லாமே ஆட் சியை கைப்பற்றுவது மட்டுமே. ஆனால் அடுத்த ஜனாதிபதி யார்?

அடுத்த பிரதமர் யார்? என்பது மக் களுடைய பிரச்சினை அல்ல. எனவே இந்தநாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தீர்க்கமாக சிந்திக்ககூடிய தலைவர்கள் தேவையாக உள்ளது. கடந்த 50, 60 வருடங்களை அவதானிக்கின்றபோது அதனையே நாங்கள் உணர்ந்து கொள்ளகூடியதாக உள்ளது. 

அதிலிருந்து நாங்கள் பாடம் கற்கவேண்டியுள்ளது. எனவே தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக நிகழ்ச்சி நிரலின் அடிப்பi டயில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை மக்கள் சரியாக அடையாளம் காணவேண்டும். மேலும் 2015ம் ஆண்டு இந்த நாட்டு மக்கள் சிறந்த ஒரு வெற்றியை எனக்கு பெற்றுக் கொடுத்தார்கள். அந்த வெற்றியை மக்கள் கொடுத்த ஆணையை நான் வீணடிக்கமாட்டேன்.

எவ்வளவு எதிர் ப்பு வந்தாலும் கூட அதனை நான் வீணடிக்கமாட்டேன். மேலும் இந்த நாட்டில் உள்ள சகல அர சியல்வாதிகளும் நாட்டின் மீது அக்கறையுடனும், அன்புடனும் செயற்படவேண்டும் என நான் கேட்டு க்கொள்கிறேன். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதை நிறுத்தவேண்டும். என நான் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவான விடயங்கள் தொடர்பாக…

ஜப்பான் நாட்டிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுவிட்டு நேற்றே நாடு திரும்பினேன். எனது அலுவலகத்தில் அதிகளவு வேலைகள் இருந்தன. ஆனாலும்இந்த பாடசாலைக் கு வருமாறு எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை என்னால் மறக்க இயலவில்லை. 

ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு இந்த நிகழ்வுக்கு கட்டாயமாக வரவேண்டுமா? என கேட்டேன். அப்போது அவர் கூறினார் யாழ்.ஆயர் மற்றும் இந்த பாடசாலையின் மாணவர்கள் என்னை அதிகமாக எதிர்பார்ப்பதாக கூறினார். ஆகவே பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் இந்நிகழ்வில் கலந்து கொண்டேன்.

அதற்கு காரணம் வடமாகாண மக்களுக்கும், இந்த பாடசாலைக்கும், இந்த பாடசாலை மாணவர்களுக்கும் நான் கொடுக்கும் மதிப்பாகும். இங்கே உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் இரா.சம் மந்தன் 2015ம் ஆண்டு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவை பற்றி கூறினார். அந்த செய் நன்றியை மறக்காமையினாலேயே நான் வடக்கில் நடைபெறும் சகல நிகழ்வுகளிலும்  தவறாமல் கலந்து கொள்கிறேன். 

இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப நிலையம் இந்த பாடசாலை யின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பழைய மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிவைக்க விரும்புகிறேன். இவ்வாறான உதவிகளை வழங்ககூடிய பழைய மாணவர்கள் இருப்பது வரப்பிரசாதமாகும். 

இவ்வாறு இலங்கையில் புகழ்பெற்ற நகர்புற பாடசாலைகள் பலவற் றுக்கும் பலம் பெற்ற பழைய மாணவர்கள் உள்ளார்கள். மேலும் 100 வருடங்கள் பழமையான இந் த பாடசாலையில் பல சிங்கள மாணவர்களும் கூட கல்வியை கற்றார்கள் என அறிந்து கொண்டேன். எனக்கு தெரியும் 50 வருடங்களுக்கு முன்னர் பல சிங்கள மாணவர்கள் வடக்கில் கல்வியை கற்றார்கள். 

நாடாளுமன்றத்தில் இருந்த அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி.ரத்நாயக்க வடக்கில் கல்வி கற்ற ஒருவர். கல்வி என்பது இனம், மதம்,மொழி என சகல பேதங்களையும் கடந் தது. அது கல்வியின் பிரதான நோக்கமும் கூட.

நல்ல கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டி ல் மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அங்கே பிரச்சினைகள் வெகுவாக தீர்க்கப்படும். ஆரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நிலைப்பதற்கு காரணம் கல்வி கற்றவர்கள் குறைவாக உள்ளமையே ஆ கும். அரசாங்கமாக தனியார் பாடசாலைகளாக இருந்தாலும்,

அரச பாடசாலைகளாக இருந்தாலும் அ வற்றுக்கு உதவிகளை செய்வதே. இங்கே கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறினார் இந்த பாடசாலைக்கு நீச்சல் தாடாகம் ஒன்று தேவையாக உள்ளதாக. எனவே அந்த நீச்சல் தடாகத்திற்கான திட்ட வரைபு ஒன்றை தயாரித்து அனுப்புங்கள். 

அதற்கான உதவிகளை நாங்கள் நிச்சயமாக செய்வோம். இந்தியாவில் 47 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்றில் கலந்து கொண்டிருந்தேன். அங்கு தலைவர்களுடன் பேசும்போது கல்வி முறைமை தொடர்பாக பேசி னேன். எங்களுடைய நாட்டில் ஆரம்ப கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வியை வழங்குது தொடர்பாக கூறியிருந்தபோது எங்களைபோல் வேறு எந்த நாட்டிலும் இலசவகல்வியை கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். 

சில நாடுகளில் 4ம் வகுப்பு வரைக்கும், சில நாடு களில் 8ம் வகுப்பு வரைக்கும் சில நாடுகளில் 15 வயது வரைக்கும் மட்டுமே இலவச கல்வியை கொ டுக்கிறார்கள். எங்களைபோல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வியை கொடுப்பதில்லை. இந்த நாட்டில் கல்வியை மட்டும் நாங்கள் இலவசமாக கொடுக்கவில்லை. 

சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளி ட்ட பல்வேறு விடயங்களை நாங்கள் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொருளாதாரரீதி யாக வளர்ச்சியடைந்த சீனா நாட்டில் கூட கல்வி இலவசமாக வழங்கப்படுவதில்லை. ஆகவே கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக கொடுப்பதால்தான் இலங்கையால் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியவில்லை. 

அதற்காக இலவசமாக கொடுப்பதை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. அப்படியான எண்ணம் எமக்கில்லை. கொடுப்பதை தொடர்ந்தும் கொடுப்போம். இந்தியாவிலிருந்து ஜ ப்பான் நாட்டுக்கு சென்றபோது அங்கே ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புக்கள் உள்ளதை அறிந்து கொண்டேன். 

இங்கே எமது மாணவர் கள் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் வேலை கேட்டு போராட்டம் நடத்துகிறார் கள். அது அவர்களுடைய தவறல்ல. இந்த நாட்டினுடைய தவறு, இந்த நாட்டின் கல்வி முறையில் உள்ள தவறு. எனவே அது மாற்றியமைக்கப்பட்டு புதிய கல்விமுறையின் அடிப்படையில் எதிர்காலத்தில் பட்டதாரிகள் எவரும் வேலைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலையை இல்லாமல் செய்வோம்.

காணாமல்போனவர்கள் தொடர்பாக…

நான் இந்த பாடசாலை நிகழ்வுக்கு வந்து கொண்டிருக்கும்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்க    ள். 

ஆனால் நாங்கள் காணாமல்போனவர்கள் அலுவலகம் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றிற்குக் கொண்டுவந்து. நாடாளுமன்றில் அதனை நிறைவேற்றி இப்போது காணாமல்போனவர்கள் அலுவலகம் ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், 

ந்த அலுவலகத்தின் கீழ் குழு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றோம். அவர்கள் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய வேலைத்திட்டத்தை சரியாக செய்துள்ளோம், சொல்லியுள்ளோம்.

அந்த விடயத்தை இங்குள்ளவர்கள் நன்றாக அறிவீர்கள். எனவே இந்த இடத்தில் காணாமல்போனவர்கள் விடயம் குறித்து  அதிகமாக பேசுவதற்கு நான் விரும்பவில்லை என்றார். 

இதேவளை புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக இருந்து பாதிரியார் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் இன்றளவும் அவரை தேடிக்கொ ண்டிருப்பதாகவும் கல்லூரியின் தற்போதைய அதிபர் நிகழ்வில் உரையாற்றும்போது கூறியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு