SuperTopAds

இஸ்லாமிய சட்டங்களில் மாற்றங்களை செய்யவும், பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யவும் அமைச்சரவையில் யோசனை..!

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய சட்டங்களில் மாற்றங்களை செய்யவும், பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யவும் அமைச்சரவையில் யோசனை..!

இஸ்லாமிய சட்டங்களில் நவம்பர் மாதத்திற்குள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும், பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யவும் யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலிசப்ரி கூறியுள்ளார். 

பாதுகாப்பு காரணங்களிற்காக பொதுஇடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் யோசனையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முஸ்லீம்சட்டங்களில் நவம்பர் மாதத்திற்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கான 

அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் முஸ்லீம் சட்டங்களில் மாற்றங்களை நவம்பர் மாதத்திற்குள் மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளோம்.

சமூகத்தில் அதிகளவில் விவாதிக்கப்படும் திருமணம் செய்வதற்காக வயதெல்லை, திருமணமாகும்போது முஸ்லீம் பெண்கள் கைச்சாத்திடுவது போன்ற மாற்றங்களை கொண்டுவரவுள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் 

பெண்களிற்கும் ஆண்களிற்கு சமமான உரிமையை வழங்குவதே இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.இதனை தவிர பொது இடங்களில் புர்கா அணியக்கூடாது என்ற சட்டத்தை கொண்டுவரவுள்ளோம். இது ஒரு சமூகத்தினை இலக்குவைத்த நடவடிக்கையில்லை. 

நாட்டின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.