சுகாதார சிற்றுாழியர்கள் பணி புறக்கணிப்பில்..! சேவையில் இறக்கப்படும் இராணுவத்தினர்..

ஆசிரியர் - Editor I
சுகாதார சிற்றுாழியர்கள் பணி புறக்கணிப்பில்..! சேவையில் இறக்கப்படும் இராணுவத்தினர்..

நாடு முழுவதும் வைத்தியசாலை சுகாதார சிற்றுாழியர்கள் பல்வேறு கோரி பணிப்புறக்கணப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில், முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினர் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

மாஞ்சோலை மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்கள் மருத்துவசேவையினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் படையினரின் இவ்வாறான செயற்பாடு அமைந்துள்ளதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்துள்ளது.இது படையிரின் ஆட்சியினை எடுத்துக்காட்டு செயற்பாடக அமைந்துள்ளது.

25.02.21 இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை படையினரே செய்துவருகின்றார்கள்.

Radio