14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது..! சிறுமி மீட்பு, பொலிஸார் விசாரணை..
கிழக்கு மாகாணம் - அம்பாறையிலிருந்து முல்லைத்தீவு - சிலவத்தைக்கு 14 வயதான சிறுமியை அழைத்துவந்து குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, அம்பாறை - பொத்துவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது காதலியான 14 வயது சிறுமியுடன்
முல்லைத்தீவு - சிலாவத்தைக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை காணவில்லையென பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக சிலாவத்தையில் தங்கியிருந்த இளைஞன்
கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.