SuperTopAds

தரங்கவின் திறமை பல தேசிய வெற்றிகளை இலங்கைக்கு பெற்று தந்தது!! -இலங்கை கிரிக்கெட் சபை புகழ்ச்சி-

ஆசிரியர் - Editor II
தரங்கவின் திறமை பல தேசிய வெற்றிகளை இலங்கைக்கு பெற்று தந்தது!! -இலங்கை கிரிக்கெட் சபை புகழ்ச்சி-

இலங்கை கிரிக்கெட் அணிக்கு உபுல் தரங்கா தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளதுடன், அவரது திறமைகள் பல தேசிய வெற்றிகளை பெற்றுக் கொள்ள எமது நாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளது என்று இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்லே டி சில்வா தெரிவித்தார். 

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

36 வயதான உபுதல் தரங்க இறுதியாக 2019 ஆம் ஆண்டில் கேப்டவுனில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்.

31 டெஸ்ட் மற்றும் 235 ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக முறையே 1754 ஓட்டங்களையும், 6,951 ஓட்டங்களையும் எடுத்த தரங்கா, இரு இன்னிங்ஸ்களிலும் சராசரியாக 31 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

அத்துடன் தரங்கா 22 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைவராகவும், 6 ரி-20 போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைவராகவும் இருந்துள்ளார். 

டெஸ்டில் அவர் அடித்த 3 சதங்களுக்கு மேலதிகமாக, தரங்க ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கை ஒருநாள் போட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்தாவது இடத்தில் தரங்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.