இங்கிலாந்தை திணறவைக்கும் அக்சே பட்டேல்!! -104 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் இழப்பு-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்தை திணறவைக்கும் அக்சே பட்டேல்!! -104 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் இழப்பு-

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழல்ச்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. 

முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ஓட்டக்கள் வித்தியாசத்திலும், 2 ஆவது டெஸ்டில் இந்தியா 317 ஓட்டங்கள்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்நிலையில் நாணயசுழல்ச்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தலைர் ஜோ ரூட் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து தற்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை பெற்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு