யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்த்தர்கள் இருவருக்கு தொற்று உறுதி..! வடக்கில் தொற்றுக்குள்ளான 42 போின் விபரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்த்தர்கள் இருவருக்கு தொற்று உறுதி..! வடக்கில் தொற்றுக்குள்ளான 42 போின் விபரம்..

யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்த்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் 17 பேருக்கும், வடமாகாணத்தில் 42 பேருக்கும் தொற்று உறுதியாகியிருக்கின்றது. 

இதில் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்த்தர்கள் இருவர் மற்றும் யாழ்.போதனா வைத்தயசாலை அவசர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், 

மய்றும் சாவகச்சோி வைத்தியசாலையில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவரும் அடங்குகின்றனர். இதேவேளை பருத்துறையில்

கொரோனா தொற்றுக்குள்ளான 13 போில் 3 மாணவர்கள் அடங்குகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 25 போில் 

24 பேர் 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனவும் மற்றயவர் மடு பிரதேச செயலக ஊழியர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

Radio