யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையுடன் தொடர்பிலிருந்த 12 பேர் உட்பட 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையுடன் தொடர்பிலிருந்த 12 பேர் உட்பட 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.பருத்துறை வட இந்துக்கல்லுாரி நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்ப உறவினர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் கடந்தவாரம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், 

அவர்களுடன் தொடர்பில் இருந்த பருத்துறையை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய தினம் பருத்துறையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

Radio