மதவாதத்தை தடுக்கவும், மதத்தின் பெரால் நடக்கும் தீவிரவாத செயற்பாடுகளை அழிக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை..!

ஆசிரியர் - Editor I
மதவாதத்தை தடுக்கவும், மதத்தின் பெரால் நடக்கும் தீவிரவாத செயற்பாடுகளை அழிக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை..!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரை நாடாளுமன்றத்திற்கு இன்று சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பரிந்துரையகளில் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மதங்களக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த தேவையான பல பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டிலுள்ள இஸ்லாமிய மதவாத அமைப்புக்கள் மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், 

அதேபோல் PEACE தொலைக்காட்சி அலைவரிசையை தடைசெய்யவும், மத நிகழ்ச்சிகளை ஊடகங்களில் ஒளிபரப்புவதைக் மேற்பார்வை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணிகளை அணிய தடை விதிக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மத அடையாளங்களுடன் காணப்படும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். பொதுபல சேனா அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும். 

அனைத்து குடிமக்களும் அந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்ய வேண்டும். அனைத்து அரசு நிலங்களையும் தணிக்கை செய்வதற்கும், 

சட்டத்துக்குப் புறம்பாக வசிப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கும் ஜனாதிபதி செயலணியை நியமிக்கவேண்டும்.

அரச புலனாய்வு சேவையில் சர்வதேச பகுப்பாய்வு பிரிவைத் தொடங்குதல், ஜமாத் இ இஸ்லாம் மற்றும் ஜமாஅத் இ இஸ்லாம் மாணவர் இயக்கம் ஆகியவற்றை தடை செய்யவேண்டும். 

இலங்கையில் பாதுகாப்பு அனுமதி இல்லாமல் எந்த வெளிநாட்டினரும் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. 

மத தீவிரவாதத்தைத் தடுக்க சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல் வேண்டும் உள்ளிட்டவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளான உள்ளன.

Radio