SuperTopAds

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது..! திகதி முடிவு செய்வதில் இழுபறி..

ஆசிரியர் - Editor I
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது..! திகதி முடிவு செய்வதில் இழுபறி..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. 

நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்தார்.

இதன்போதே அறிக்கையை தாமதமின்றி பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டது. எனினும் அதற்கான திகதி முடிவுசெய்யப்படாத நிலையில், 

அது தொடர்பில் கட்சித் தலைவர்களை கொண்ட பாராளுமன்ற அலுவல் பற்றிய குழு தீர்மானிக்கும். கார்தினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் பிற அரசியல் 

மற்றும் சிவில் சமூகங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதன் பிரகாரம் பாராளுமன்றம், 

நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்புப் படைகள், அரச புலனாய்வு சேவைகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 

மற்றும் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட ஒட்டுமொத்த செயன்முறையை அடையாளம் காணுதல் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அதில் பிரதான இடம் வகிக்கின்றது.