யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவரை தொடர்ந்து தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..! போதனா வைத்தியசாலை முடக்கப்படுமா என அச்சம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவரை தொடர்ந்து தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..! போதனா வைத்தியசாலை முடக்கப்படுமா என அச்சம்..

யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் வைத்தி நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நரம்பியல் வைத்திய நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்களுக்கு 

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில் வைத்தியசாலை முடக்கப்படுமா என்ற அச்சத்துடனான கேள்வி எழுந்திருக்கின்றது.

Radio