SuperTopAds

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பயணம் செய்த பேருந்தை வழிமறித்து மக்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பயணம் செய்த பேருந்தை வழிமறித்து மக்கள் போராட்டம்..!

புதுக்குடியிருப்பு - வள்ளுவர்புரம் மற்றும் மாணிக்கபுரம் கிராம மக்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் கிராமத்தினை சேர்ந்த சிலருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 

கிராமத்தில் மக்களை கொவிட் 19பாதுகாக்கும் நோக்கில் கிராமமட்ட அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிராமத்தில் இருந்து ஆடைத்தொழில்சாலைக்கு செல்வர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

இது குறித்து கிராம அமைப்புக்கள் நேற்றய தினம் கிராமத்தில் கூடி கலந்துரையாடி கிராமத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.இதன் கட்டமாக கிராமத்தில் இருந்து அதிகாலைவேளை ஆடைத்தொழில்சாலை ஊழியர்களை 

ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகளை கிராமத்தில் இருந்து வெளியில் செல்லவிடாமல் தடுதுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்த புதுக்குடியிருப்பு பொலீசார் பேருந்துக்களை செல்லவிடுமாறு அறிவுறுத்தியும் 

மக்களால் பேருந்து தடுக்கப்பட்டு அதில் பயணித்தவர்கள் இறக்கப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவத்தின் போது புதுக்குடியிருப்பில் இயங்கும் மற்றும் கிளிநொச்சியில் இயங்குகின்ற ஆடைத்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து 

கிராம அமைப்பினருடன் பேச்சுநடத்தியுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதா அதிகாரியினை சந்தித்து அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது. குறித்த கிராமங்களில் இருந்து 200 பேர்வரை 

காமன்சிற்கு வேலைக்கு செல்கின்றார்கள் இதில் 8 பேருக்கு தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது இது பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று வீதிமறிப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என கிராம அமைப்பினை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

புதுக்குடியிருப்பு போது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல் பெறப்பட்டு அதன்படி செயற்படவுள்ளதாக அதிகாரியுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ளார்கள். புதுக்குடியிருப்பில் இயங்குகின்ற ஆடைத்தொழில்சாலை 

சுகாதார வைத்திய அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாகவும் கிளிநொச்சி ஆடைத்தொழில்சாலை அப்படி இல்லை என்றும் இங்கு மாவட்ட பிரச்சனை காணப்படுகின்றது முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி செல்கின்றார்கள் 

இரண்டு மாவட்டங்களில் உள்ள சுகாதார பரிசோதகர்களுக்கிடையில் சரியான தொடர்பாடல் இல்லை கிளிநொச்சியில் வேலை செய்பவர்கள் விபரங்கள் முல்லைத்தீவிற்கு அனுப்பப்படுவதில்லை. கிளிநொச்சி ஆடைத்தொழில்சாலையில் 

பி.சி.ஆர் பரிசோதனை செய்வதாக சொல்கின்றார்கள் அதன் பெறுபேறு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பப்படவேண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி ஆடைத்தொழில்சாலையில் பணிசெய்பவர்கள் 

விபரம் உடனடியாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதாரபணிமனைக்கு தரவேண்டும் என அதிகாரி அறிவித்துள்ளதுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றுகின்றவர்கள் கண்காணிக்கப்படும் என்று 

சுகாதார வைத்திய அதிகாரி இதன்பேது உறுதியளித்துள்ளதாக அதிகாரியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்ததுள்ளார்கள்.