இலங்கையுடனான போட்டிக்காக சொந்த நாட்டிற்கு விரையும் கிறிஸ் கெய்ல்!!

ஆசிரியர் - Editor II
இலங்கையுடனான போட்டிக்காக சொந்த நாட்டிற்கு விரையும் கிறிஸ் கெய்ல்!!

ரி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகியுள்ளது. இருப்பினும் இலங்கையுடன் விளையாடவுள்ள மேற்கிந்த தீவுகள் குழாம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

எனினும், மேற்கிந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், தற்போது விளையாடிவரும் ரி-20 போட்டிகளை நிறைவு செய்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக அறியமுடிகிறது.

அவர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளில் க்கேவட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் கிறிஸ் கெயில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதி கட்டப் போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Radio