பூநகரி மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் மேலும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா தொற்று..! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..

கிளிநொச்சி - பூநகரி மத்திய கல்லுாரியில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் யாழ்.சாவகச்சோியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தற்செயலான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து இன்று யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 752 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிளிநொச்சியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் ஒருவர் குறித்த ஆசிரியர் எனவும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஆசிரியையுடன்
தொடர்பில் இருந்தவர் எனவும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.