நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் துரித முயற்சி..! யாழ்.மாவட்டத்தில் காணி அற்ற மக்களுக்கு காணி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் துரித முயற்சி..! யாழ்.மாவட்டத்தில் காணி அற்ற மக்களுக்கு காணி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பம்..

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் துரித நடவடிக்கையினால் யாழ்.மாவட்டத்தில் காணி அற்ற மக்களுக்கு காணிகள் வழங்கப்படவிருக்கின்றது. 

பளை, மருதங்கேணி மற்றும் வடமாகாணத்தின் இதர பகுதிகளில் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கமைய காணி வழங்கும் திட்டத்திற்கான விபரங்களை அனுப்பிவைக்குமாறு சல பிரதேச செயலர்களுக்கும் மாவட்டச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். 

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கடந்த மாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலில் 

எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த விடயம் மாவட்ட செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்அடிப்படையில் மருதங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் வழங்கும் காணிகளில் குடியமர விரும்புவோரின் விவரங்கள், 

பளைப்பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்படும் காணிகளில் தாமாகவே கொள்வனவு செய்து குடியேற விரும்புவோர், 

பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அதில் குடியேற விரும்புவோர் 

மற்றும் வடக்கு மாகாணம் தவிர்ந்த எப் பாகத்திலும் குடியேற விரும்புவோரின் பெயர் விவரங்களை உரிய அறிவுரைகளை பின்பற்றி தமக்கு அனுப்பி வைக்குமாறு 

மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு