ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்தியா இலங்கையை ஆதரிக்கும்..! நாளை இரவு 8 மணிக்கு இலங்கையன் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும்..

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்தியா இலங்கையை ஆதரிக்கும்..! நாளை இரவு 8 மணிக்கு இலங்கையன் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும்..

ஐ.நா மனித உரிமைகள் 46வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான நிலையில் இந்தியா தனது ஆதரவினை இலங்கைக்கு வழங்கும். என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

எமக்கு ஆதரவு வழங்குமாறுகோரி துாதரகம் ஊடாக ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் பல்வேறு உறுப்புநாடுகளுக்கும் 

இவ்வாறு இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இறைமை உள்ளநாடு என்றவகையில் இலங்கைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகும் கூட்டததொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு புதிய பிரேரணை இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படும் பட்சத்தில் 

அதனை இலங்கை எதிர்க்கும்போது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடத்தப்படும்போது இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை மனித உரிமைபேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் நாளை இரவு 8 மணிக்கு இணைய வழியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளேன். இதன்போது இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக ஐக்கியநாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு அறிவிக்கப்படும்.

நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்ன செய்யப்போகின்றோம் எமது நிலைப்பாடு என்ன என்ற விடயங்களை நாங்கள் மிகத்தெளிவாக விரிவாக அறிவிப்போம். அதே போன்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையாளர் 

இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு நாம் எமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றோம். இதேவேளை ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் ஆதரவு வழங்குமாறுகோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 

உறுப்பு நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றோம்.உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் நாங்கள் இவ்வாறு ஒத்துழைப்பு கோரிய கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பலநாடுகளினாலும் ஆதரவுவாங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய நாடு. இந்தியாவானது இலங்கைக்கு சகலவழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

அதன்படி இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம். இலங்கை இறைமையுள்ளநாடு. ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டுவரமுடியாது. 

அந்தவகையில் அவ்வாறான ஒருமுயற்சி இடம்பெறும்போது எமக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்றுநம்புகிறோம்.குறிப்பாக சீனாவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு