ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் மணி! - ஆர்னோல்ட்.

ஆசிரியர் - Admin
ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் மணி! - ஆர்னோல்ட்.

யாழ்ப்பாண மாநகர சபை மேயர் அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, முன்வைக்கிறார் என முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே, அந்த நிலையம் திறப்பதில் காலதாமதம் காணப்பட்டதாக, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தைக் கையேற்பதற்காக தாம் பல முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் கலாசார நிலையத்தக இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்தித்து உரையாடவும் நிர்வாக ரீதியில் அனுமதி கோரியிருந்ததாகவும் கூறினார்.

அதற்கான அனுமதி கிடைத்து உரையாடவுள்ள விடயங்கள் தொடர்பில் பட்டியல் கோரப்பட்டபோது, இந்த விடயமே முதன்மைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

"நான் மாநகர மேயராக இருந்த காலத்தில், இதனை திறக்க முயன்றும் கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட காலத்தில், சிலர் இதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல முயலப்பட்டது.

இதை அறிந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா ஊடாக, இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்து இதனை உடன் திறக்கவும் இந்தியப் பிரதமர் மோடியே திறந்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தோம்" எனவும் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

இந்தக் கட்டடம் வராதுவிட்டால் தனது சொந்தப் பணத்தில் வழங்கத் தயார் என தமது கட்சி உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் ஓர் உறுப்பினரும் கூறியதன் பெயரிலேயே அது அன்று அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவை எதுவுமே அறியாது மேயராக வந்தவர், ஓடிப்போய் அக்கட்டிடத்தை பார்த்து வழி நடத்துகிறாராம். இது தான் அநாகரீக அரசியல் எனவும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு