SuperTopAds

6 மாதத்தில் 600 கிராம் நிறையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி, சுகதேகியாக மாற்றி யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை..!

ஆசிரியர் - Editor I
6 மாதத்தில் 600 கிராம் நிறையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி, சுகதேகியாக மாற்றி யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை..!

யாழ்.மந்திகை வைத்தியசாலையில் 600 கிராமுடன் பிறந்த குழந்தையை பராமரித்து ஆரோக்கியமான குழந்தையாக்கி யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத கர்ப்பவதியாக இருந்த அன்று குற்றுக் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மந்திகையில் அனுமதிக்கப்பட்ட தாயார் 

உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருந்தபோதும் அவர் குழந்தை பிரவசித்தார் சாதாரண கர்ப்ப காலம் 40 வாரமாக உள்ளபோதும் 

24 வார கர்ப்பத்தில் பிறந்த  குழந்தையின் நிறை 600 கிராம் மட்டுமே காணப்பட்டதனால் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் டீபால் நவரட்ண  தலைமையிலான மருத்துவக் குழுவினர்  4 மாத முயற்சியில் 

அதாவது 97 நாட்கள் பராமரிப்பில்  குழுந்தை பூரண நலமாக தற்போது தாயாருடன் வீடு சென்றமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது சம்பவமாக பதிவிடப்படுகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நீண்டகாலம் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் வெற்றிடமாக இருந்தபோதும் தற்போது அந்த வெற்றிடம் நிரப்பப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை அளிக்கப்படும் அதேநேரம் 

தற்போது மற்றுமோர் தாயார் 25 வார கர்ப்ப காலத்தில் பிரசவித்த குழந்தையும் சுகதேகியாக வைத்தியசாலையில் பராமரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.