SuperTopAds

யாழ்.மாநகருக்குள் நுழையும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் வைத்தியசாலை வீதியை பயன்படுத் முற்றாக தடை..! போக்குவரத்து பொலிஸார் கடமையில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் யாழ்.போதனா வைத்திய சாலை வீதியால் நகருக்குள் நுழைவதற்கு முற்றாக தடை செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த பேருந்துகள் பிரதான வீதி வழியாக புதிய பஸ் தரிப்பிடத்திற்கு செல்லவேண்டும் எனவும், புதிய பேருந்து நிலையத்தை தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து சாரதிகள் பயன்படுத்த

மறுத்துவரும் நிலையிலேயே யாழ்.மாநகரசபையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இம் முடிவானது யாழ்ப்பாணம் போக்குவரத்து போலீசாருக்கும் அறிவித்து இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பேருந்துகள் வைத்திய சாலை வீதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டால் யாழ் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும். 

எனவே அனைவரினதும் ஒத்துழைப்பை இது தொடர்பில் வேண்டி நிற்கின்றேன். யாழ்.மாநகர முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.