இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

டேவிட் சாகர் கடந்த வியாழக்கிழமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.

தனது தனிப்பட்ட காரணங்களாக பதவியில் இருந்து விலகிய டேவிட் சாகருக்கு பதிலாக இலங்கை அணியின் முன்னாள் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸை பெயரிடுவது குறித்து உயர் அதிகாரிகள் விவாதித்து வந்தனர்.

இந்நிலையில் அடுத்த தொடருக்கான வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 


Radio