யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது, நகைகள், பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பல் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொரிட்களும் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த  மூவரங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டது.

அண்மையில் யாழ்.மருதடி வீதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டுப் போயிருந்தன.

அத்துடன் அண்மையில் இரவு வேளை அரியாலை பகுதியில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் திருட்டுப் போயிருந்தன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவை தொடர்பில்  பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடயங்களின் அடிப்படையில் பாசையூர், குருநகர் மற்றும் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் 23 தொடக்கம் 40 வரையிலான மூவர் கைது செய்யப்பட்டனர். 

சந்தேக நபர்கள் மூவரிடமும் நகை மற்றும் பொருள்களை வாங்கி குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு