SuperTopAds

இளைஞனின் வங்கி கணக்கின் ஊடாக 1 ட்றில்லியன் ரூபாய் பணத்தை பரிமாற்ற நடந்த முயற்சி..! தீவிர விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
இளைஞனின் வங்கி கணக்கின் ஊடாக 1 ட்றில்லியன் ரூபாய் பணத்தை பரிமாற்ற நடந்த முயற்சி..! தீவிர விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு..

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கின் ஊடாக சுமார் 1 ட்றில்லியன் ருபாய் பணத்தை பரிமாற்றம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்கள் இம்மாதம் 22ம் திகதிவரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 

குறித்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடாத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணிக்கப்பட்டிருக்கின்றது. வெளிநாடு ஒன்றில் இருந்து சுமார் 1 டிரில்லியன் ரூபாவை பரிமாற்றம் செய்ய இடம்பெற்ற முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பண பரிமாற்ற விவகாரம் தொடர்பில் வவுனியாவில் தங்கியிருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, 

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இளைஞரை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் மாலை குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, அவிசாவளை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களின் சொகுசு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் தற்போது வவுனியாவில் வசித்து வரும் நிலையில், அவருடன் நெருங்கிப் பழகியவர்களே அவரைக் கடத்த முயன்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஒன்றாக தொழில் புரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.