ஸ்டீவ் ஸ்மித்துக்கு 2.2 கோடி!! -ஏலம் எடுத்த டெல்லி அணி-

ஆசிரியர் - Editor II
ஸ்டீவ் ஸ்மித்துக்கு 2.2 கோடி!! -ஏலம் எடுத்த டெல்லி அணி-

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் அணிகளுக்கான ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி 2.2 கோடி ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளது, 

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 292 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 அசோசியேட் நாடுகளின் வீரர்களும் அடங்கினர். 

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது, 

இருப்பினும் அவுஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் ஹனுமான் விஹாரி ஆகியோரை யாரும் ஏலம் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு