மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா..! பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி, முழுமையான விபரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவை மாகாண சுகாதார பணிப்பாளர், யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா இம்மாதம் 24ம், 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், நாட்டில் கொரோனா அபாயம் நிலவும் நிலையில் பட்டதாரிகள் மட்டும் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதிக்கப்படுவர். 

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சகல பட்டதாரிகளுக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்பே பட்டமளிப்பு விழா மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு

நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படும். பட்டம் பெறும் பட்டதாரிகள் மருத்துவபீட நுழைவாயில் ஊடாக மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்த பின்னர் பல்கலைகழக மைதானத்தின் பிரதான வாயில் ஊடாக மட்டும் வெளியேறலாம். 

மேலும் ஆடியபாதம் வீதி, பல்கலைகழக வளாக வீதி, தபால்பெட்டி வீதி மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறும் யாழ்.பல்கலைகழக மைதான சூழல் ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

வழமை போன்று பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நினைவுப் பேருரைகளும் இடம்பெறவுள்ளன. சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரைகளை இம்முறை சிரேஸ்ட பேராசிரியர் வ.புஸ்பரட்ணம் 

“யாழ்ப்பாணக் கோட்டையில் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஓர் புதிய பார்வை” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை இம்முறை முன்னாள் துணைவேந்தரும், சிரேஸ்ட பேராசிரியருமான செல்வி வசந்தி அரசரட்ணம்

 “கல்விப் புலத்தில் பெண்கள் இலங்கை அரச பல்கலைக்கழகங்களைச் சிறப்பாகக் கொண்டது” என்ற தலைப்பிலும் வழங்கவுள்ளனர் என்றார். யாழ்.மாவட்டத்திற்குள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது உறுதியான

பின்பே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு