SuperTopAds

தமிழ் மொழியில் பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு..! யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். 

குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் 

தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்கப்படுமென சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் தொிவித்துள்ளார்.