வடமாகாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..! நுாதன கொள்ளை அதிகரிப்பு, ஈஸி ஹஸ் மூலம் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம்..

ஆசிரியர் - Editor I

வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை இலக்குவைத்து நுாதனமான முறையில் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக வடமாகாண மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்ளும் மர்ம நபர்கள் அவர்களிற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி அவர்களது குடும்ப சூழல் தொடர்பாக விசாரித்து பாசாங்கு செய்கின்றனர்.

பின்னர் அவர்களிற்கு பண உதவி செய்வதாக தெரிவித்து நம்பவைப்பதுடன் பணத்தினை உங்களுக்கு வழங்கவேண்டுமானால் சிறுதொகை பணத்தினை ez காஸ்மூலம் தமது தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்துள்ளனர். 

பணத்தினை அனுப்பிய சற்றுநேரத்தில் உங்களது பணம் வங்கி கணக்கில் வைப்பிடப்படும் என்று நம்பவைத்துள்ளனர். இதனை நம்பி பலர் மூவாயிரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தினை ez காஸ் மூலம் அவர்களிற்கு அனுப்பியுள்ளனர். 

அதன்பின்னர் குறித்த நபர்களின் தொலைபேசி இலக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை பின்னரே உணர்ந்துள்ளனர்.குறித்த சம்பவங்கள் வவுனியாவின் கிராமப்புறங்களில் அதிகமாக பதிவாகிவருகின்ற நிலையில் 

பொதுமக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு