அரசுக்கு ஆதரவு த.தே.கூடடமைப்பின் பின்னடைவுக்கு காரணம் -கூறுகிறார் இரா.சம்மந்தன்-

ஆசிரியர் - Editor
அரசுக்கு ஆதரவு த.தே.கூடடமைப்பின் பின்னடைவுக்கு காரணம் -கூறுகிறார் இரா.சம்மந்தன்-

தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கும் நிலையில் அரசு மக்களுக்கு செ ய்யவேண்டிய எதனையுமே செய்வதாக இ ல்லை. இதனாலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பின் னடைவை சந்தித்துள்ளது. இவ்வாறே 1965 ம் ஆண்டும் அ.அமிர்தலிங்கம் காலத்திலும்  அரசுக்கு அதரவை வழங்கியதால் நாம் பின்னடைவை சந்தித்தோம்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பி ன் தலவரும், எதிர்கட்சி தலைவருமான இ ரா.சம்மந்தன் கூறியுள்ளார். யாழ்.சுழிபுரம் வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சித் தலைவரும் நாடறிந்த மூத்த தமிழ்த் தலைவருமான  அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலை திறப்பு விழா கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு இத் திருவருவச் சிலையைத் திறந்து வைத்து விசேட உரையாற்றுகையிலையே சம்மந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

தமிழ் மக்களின் சம உரிமை வாழ்விற்கும் விடுதலைக்கும் உறுதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தவர் தான் அண்ணன் அமிர்தலிங்கம். அவரின் இழப்பு எமக்கு பெரும் இழப்பாகும். அன்றைய காலத்தில் அவர் முன்னெடுத்த செயற்பாடுகளை அவரது பயணத்தை தற்போதும் நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். 

இந்த இனத்திற்காக தன்னாலான பாரிய பங்களிப்பை அவர் செய்திருக்கின்றார். இதனை அனைவரும் அறிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தான் 1965 ஆம் ஆண்டு எமது கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி 1965 இற்கும் 1970 இற்கும் இடையில் அரசாங்கத்தில் ஒரு பங்காளிகளாக இருந்தோம். 

ஆனால் அமைச்சர் பதவிகளை ஏற்கவில்லை. இருந்தும் திருச்செல்வம் மாத்திரம் சில சட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் பதவி உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்.

ஆயினும் அந்தக் கருமங்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை. மக்கள் மனிதில் பல சந்தேகங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. 

அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சி ஒரு பலவீனத்தை அடைந்திருந்தது. அதே நிலைமையை இன்று பார்க்கின்ற பொழுது தமிழரசுக் கட்சி இப்போதைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து அந்த அரசாங்கம் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாக ஆற்றாத காரணத்தின் நிமித்தம் மக்கள் மத்தியில் அதிருப்தி எற்பட்டிருந்தது. 

அந்த அதிருப்தியின் மூலமாக சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

இவ்வாறு கடந்த் 70 ஆம் ஆண்ட நடைபெற்ற பாராமன்றத் தேர்தலிற்கும் தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கும் ஒரு இணக்கப்பாட்டை நான் கானுகின்றேன். 

நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கிய இந்தக் காலங்களில் அரசாங்கம் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாக முறையாக ஆற்றாத காரணத்தின் நிமித்தம் மக்கள் அதிருப்தி அடைந்து எமது கட்சிக்கு மாறாக வாக்களித்திருக்கின்றார்கள். அந்த உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது விடயம் சம்மந்தமாக சிந்திக்க வேண்டியதொரு தேவை இருக்கின்றது. 

இதன் பின்னர் 77 ஆம்அண்ட நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றோம். 18 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று அங்கு எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் அண்ணன் அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். இதனால் அவருடைய சர்வதேச தொடர்பகள் அதிகரித்தது. இதன் போது பல நாட்டு பிரதிநிதிகளையும் சந்தித்து எங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். 

இதில் இந்தியாவின் இந்திரா காந்தியையும் சந்தித்த போது உங்கள் நாட்டின் சம அந்தஸ்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாட்டின் பிரிவினையை அனுமதிக்க மடியாது என இந்திரா காந்தி அமிர்தலிங்கத்திடம் கூறியிருந்ததுடன் ஆன படியால் உங்கள் கொள்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென்றும் இந்திராக காந்தி கேட்டிருந்தார். அதாவது நீங்கள் சமஷ்டி அடிப்படையிலானதொரு தீர்வைக் கோர வேண்டும். அவ்விதம் நீங்கள் கேட்பீர்களானால் அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம் என்றும் இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் தமீழிழக் கொள்கை அடிப்படையில் இருந்த போதும் இதன் பின்னர் கொள்கை அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் தமிழீழத்திற்குப் பதிலான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுமாக இருந்தால் அந்தத் தீர்வை எம் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அவர்களது அங்கீகாரத்துடன் செயற்படுவோம் என்பதை அமிர்தலிங்கம் வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரனையொன்று கொண்டுவரப்பட்டு நிலைமைகள் மோசமடையத் தொடங்கயிருந்தன. இதனையடுத்து நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டு பின்னர் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு பல பிரச்சனைகள் பேச்சுக்களின் பின்னர் தான் இலங்கை- இந்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனூடாக வந்த 13 ஆவது திருத்தத்தை நாங்கள் முழுமையான நிரந்தரமான தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அன்றும் கூறியிருந்தோம். இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். அந்தத் தீர்வ இன்னும் முன்னொக்கிச் செல்ல வேண்டும் என்றே கூறி வருகின்றோம். 

இவற்றையெல்லாம் தற்போது ஏன் கூறுகின்றோம் என்றால் தந்தை செல்வா மற்றும் அண்ணன் அமர்தலிங்கம் போன்றவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளை அவர்களது பயணத்தை நீங்கள் எல்லோரும் அறிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டுமென்தற்காகவே.

இன்றைக்கு அவருக்கு நாங்கள் சிலை திறக்கின்றோம். எமது அரசியல் வரலாற்றில் பாரிய பங்களிப்பைச் செய்தவர் அமீர் அண்ணன். அவருக்கான மதிப்பை நாங்கள் செலுத்துகின்றோம். அவரது திறமைகளும் அர்ப்பணிப்புக்களும் மிகப் பெரியவை. அவரின் இழப்பு எமக்கு பெரும் இழப்பு. அவர் முன்னெடுத்த சர்வதேச ஆதரவு தொடர்புகள் இன்றைக்கும் தொடர்ந்து வருகின்றன. 

அண்ணன் அமிர்தலிங்கத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது அந்தக் காலத்தில் எங்கள் போராட்டங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய தவறுகளைப் பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டியதும் எங்களது கடமையென்று நான் கருதுகின்றேன். தந்தை செல்வா அவர்கள் பண்ணடாரநாயக்கவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். 

அதனையும் எங்களில் சிலர் எதிர்த்தனர். அதே போன்று டட்லி செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனையும் சிலர் எதிர்த்தார்கள். சமஷ்டிக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்த போது அதனையும் எங்கள் இனத்திலுள்ள சிலர் எதிர்த்தார்கள். அவ்வாறு எதிர்;ப்ப்து ஒரு விடயம். ஆனால் சிறுபான்மை மக்கள் சார்பில் கட்சியைப் பிரதிதிநித்துவப்படுத்துகின்ற முக்கியமான கட்சி ஒரு குறிப்பிட்ட கொள்கையை முன்வைக்கின்ற பொழுது அதே இனத்தைச் சார்ந்த இன்னுமொரு கட்சி அல்லது இன்னுமொரு தலைமை எதிர்க்குமாக இருந்தால் அந்தக் கோரிக்கை சம்மந்தமாக ஏற்படுகின்ற பலவீனத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இவ்வாறு பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் நிலைவேற்றப்படவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை பொறுத்தவரையில் அம்மையார் இந்திராகாந்தி தலையீடு செய்யும் வரையில் ஒரு முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர் தலையீடு செய்ததன் பின்னரே ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. எங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்கள் ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்கள் இந்தக் கோரிக்கைகளை எதிர்த்த காரணத்தின் நிமித்தம் எமது கோரிக்கை எந்தளவிற்கு பலவீனமடைந்தது அதன் மூலமாக மற்றையவர்கள் அதை நிறைவேற்றாமல் இருப்பதற்கு நாங்கள் அளித்த சந்தர்ப்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.

அவ்விதமான எதிர்பின் மூலமாக அவர்கள் எதனைச் சம்பாதித்தார்கள். தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். ஓரளவு ஆதரவையும் பெற்றார்கள். ஆனால் நாங்கள் பெற வேண்டியதைப் பெறுவதற்கு தடையாக இருந்தார்கள். அந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. அந்த நிலைமை தொடர்ந்தால் அதன் மூலமாக நாங்கள் பல விதமான இழப்புக்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். 

இன்றைக்கு நாங்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றோம். அதாவது ஒருமித்த நாட்டிற்குள் பிளவுபடாத நாட்டிற்குள் பிளவுபடுத்தப்பட முடியாத நாட்டிற்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது இறையான்மையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். அது தான் எமது கொள்கை. அது தான் எமது நிலைப்பாடு. இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

எவரும் இதனை மறுக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழீழம் தான் நிலைப்பாடு என்று கூறினவர்களும் கூட இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆகவே இதை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். இதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் எங்கள் மத்தியில் போட்டியின் மூலமாக அல்லது எதிர்ப்பதன் மூலமாக அல்லது நிராகரிப்பதன் மூலமாக நாங்கள் இதை முன்னெடுக்க முடியாது. இன்றைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு ஏறத்தாழ முழுமையாக எங்களுக்கு இருக்கிறது. 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மான் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2013, 2014 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு 2015 ஆம் ஆண்டு ஏகமனதாக அரசும் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானம் மேலும் 2017 ஆம் ஆண்டு மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அதில் எமது சகல கருமங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 

ஆனபடியால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் வலியுறுத்த வேண்டும். அதனை அவர்கள் நிறைவேற்றுவதற்கு 2019 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையில் கால அவகாசம் இருக்கின்றது. ஆகவே அதை நிறைவேற்ற வைக்க வேண்டும். அதை நிறைவேற்றாது விட்டால் சர்வதேச ச5கம் என்ன செய்யப் போகின்றதென்பதைச் சொல்ல வேண்டும். அதில் என்ன நடக்கிறதென்பதை நாங்கள் அறிய வேண்டும். 

எமது மக்களை சர்வதேச சமூகத்தால் கைவிட முடியாது. நாங்கள் தனி ஈழத்தைக் கேட்டோம். அதனைக் கைவிட்டும் விட்டோம். 30 வருட காலமாக இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்று அது முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் 30 வருட காலமாக இளைஞர்கள் மண்ணிலும் கடலிலும் வானிலும் அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். அது தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 

எவ்வளவு தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். அது எதற்காக என்றால் நீதிக்காக நியாயத்துக்காகத் தான். சுர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பெற வேண்டியதைப் பெறுவதற்காக. மனித உரிமைகள் சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் எம்மை ஆட்சி புரிவதற்கு ஒரு அரசாங்கத்திற்கு எமது சம்மதம் இருக்க வேண்டும். எமது இணக்கப்பாடு இருக்க வேண்டும். 

1956 ஆம் ஆண்டு முதல் இன்றை வரையில் நாங்கள் எமக்கு குறிப்பிட்ட ஆட்சி முறை தேவை என்றும் அது சமஷ்டி முறையிலான உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நாங்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குத் தேவை என்றே கேட்கின்றோம். 

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அது எமது உரித்து. எமது உரிமை.  அரசியல் உரிமைகள் சம்மந்தமான சர்வதேச ஒப்பந்தம், பொருளாதார, கலாச்சார விடயங்கள் சம்மந்தமான சர்வதேச ஒப்பந்தம். இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணயத்திற்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அவ்விதமான உள்ளக சுயநிர்ணய உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. 

இதைத் தான் சர்வதேசத்திடமும் கூறி கேட்கின்றோம். இவற்றுக்காகத் தான் தந்தை செல்வநாயகமும் அண்ணன் அமிர்தலிங்கமும் போராடினார்கள். இந்த அடிப்படையில் தான் பேராடினோம். ஒரு அடிப்படை இல்லாமல் நாங்கள் போராடவில்லை.

13 அவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களின் காலங்களில் பல்வேறு கருமங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பின்னராகவே தற்போதைய ஐனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் பல்வெறு கருமங்கள் நடைபெற்றிருக்கின்றன. 

அவ்வாறு நடைபெற்றும் கொண்டிருக்கின்றன. தேசிய பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காணுமாறு அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தை மற்றும் ஆவணி மாத்தில் ஆணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அந்தத் தீர்வை அவர்கள் காண வேண்டும். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டும். அந்தக் கருமங்கள் தொடர வேண்டும். ஆகவே அந்தக் கருமங்கள் தொடர்ந்து அவர்களுக்கு வழங்pய ஆணையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். 

அவற்றை அவர்கள் நிறைவேற்றாது விட்டால் ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுக்கக் கூடாது. சர்வதேச ச5கத்தின் அழுத்தம் இருக்க வேண்டும். எமது ஆயுதப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தது. ஏனென்றால் இலங்கை அரசாங்கம் தாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம் என்று சர்வதேச சமூகத்திற்கு கூறியிருந்தது. ஒரு தீர்வைக் கொடுப்போம் என்று கூறியிருந்த பொதிலும் தீர்வு இன்னும் வரவில்லை. 

இன்றைக்கு உலத்திலுள்ள ஒரு வல்லரசு முழுமையாக எங்களுக்குப் பின்னால் நிற்கின்றது. அதே போன்று பிராந்திய வல்லரசொன்றும் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. மேலும் பல நாடுகளும் பல பிராந்தியங்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்கள் எல்லோருடைய அழுத்தங்களும் ஒன்று கூடி எமக்கு நியாயமானதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அது தான் எமது கோட்பாடும் கோரிக்கையும் ஆகும்.. 

ஆகவே இதில் நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். நாங்கள் பிரிந்து நிற்க முடியாது. இந்தக் கருமத்தில் நாங்கள் வெற்றி காணுவதாக இருந்தால் எமது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்கு பல்வேறு கட்சிகள் பல்வேறு கருத்துக்களைக் கூறிக் கொண்டு பல்வேறு திசையில் சென்றால் நாங்கள் எமது குறிக்கோளை நோக்கி பயணிக்க முடியாது. இதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத் தான் அமிர் அண்ணன் போன்றவர்கள் நீண்டகாலமாக அரும் பணிகளை ஆற்றியிரந்தார்கள். இதனை நீங்கள் மறந்தவிடக் கூடாது. 

எமது மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு விடிவு வர வேண்டும். எமது மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கியிரக்கின்றார்கள். குறிப்பாக காணாமல் போனோர் பிரச்சனை, காணி விடுவிப்பு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ளவர் பிரச்சனை. இந்த எல்லாக் கருமங்களிலும் ஒரளவிற்கு முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் போதியளவிற்கு முன்னெற்றம் ஏற்படவில்லை. அரசாங்கள் உண்மை நிலைமைகளை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அநீதிகளை இழைக்கப்பட்ட அநியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் தெளிவாக கூற வேண்டும். 

அவ்வாறு கூறி தமிழ் மக்களுக்கு நியாயம், நீதி வழங்க வேண்டியது எங்டகளுடைய கடமை. அந்தக் கடமையில் இருந்து நாங்கள் தவற முடியாது என்பதையும் சிங்கள மக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். ஆகவெ அந்தக் கடமையிலிருந்து தவறினோமாக இருந்தால் சர்வதேச சமூகத்திற்கு சில வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றோம், சில ஒப்பந்தத்தை கொடுத்திருக்கின்றோம் அதன் காரணமாக விளைவுகள் ஏற்படலாம். 

ஆனபடியால் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை அல்லது செய்ய வேண்டியதைச் செய்கின்றோம் என்றோ கொடுக்கின்றோம் என்றோ அந்த உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு வழங்க வேண்டும். அதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு ஏற்பமூகின்ற ஒற்றுமையின் 5லமாக ஒருமித்துச் செயற்படுவதன் மூலமாக உறுதியான ஆதரவைக் கொடத்து செயற்பட்டு நல்ல முடிவிற்கு வர வேண்டும். அது தான் அமிர்தலிங்கம் மற்றும் தந்தை செல்வா போன்ற தலைவர்களுக்கு நாங்கள் ஆற்றக் கூடிய சேவையாக இருக்குமென்றார்.